Maroc நிலநடுக்கத்தில் பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் பலி, எட்டுப் பேர் படுகாயம். வெளிநாட்டு அமைச்சு.
10 புரட்டாசி 2023 ஞாயிறு 06:36 | பார்வைகள் : 14440
Maroc நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணிநேரம் கடந்த நிலையில் பலி எண்ணிக்கை 2013 ஆக அதிகரித்து உள்ளது காயமடைந்தோர் 2059 ஆகவும் அவர்களில் 1404 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணி தொடர்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தோரால் நிரம்பி வழிகிறது .
பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், அல்ஜீரியா போன்ற நாடுகளில் இருந்து பலவகையான உதவிகள் Maroc சென்றடைந்து உள்ளன.
இந்த பேரனத்ததில் பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் பலியாகியுள்ளதாகவும், எட்டு பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan