கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் திகதி அறிவிப்பு!

11 ஆடி 2023 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 10838
2023ம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயர்தரப் பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அரச சாரா பல்கலைக்கழகங்களில், பட்டபடிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்து கொள்வதற்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனை, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1