கூகுள் நிறுவனத்தை திணற வைத்த கங்ணம் ஸ்டைல்
6 மார்கழி 2014 சனி 07:18 | பார்வைகள் : 15251
தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் கூகுள் நிறுவனத்தை கூட திணற வைத்துள்ளது.
2012 ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் உலகம் முழுவதையும் ஒரு கலக்கு கலக்கிய பிரசித்தமான பாடல் என்பது தெரியும்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல வி.வி.ஐ.பிகளும் இந்த குதிரை நடனப் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்நிலையில் இணைய உலகமே இப்பாடலை கையாள்வதற்கு தயார் நிலையில் இல்லாதிருந்த தகவல் இவ்வாரம் வெளியாகியுள்ளது.
யூ ரியூப் இணையத்தளத்தில் இப்பாடலை பார்க்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை இவ்வாரம் 215 கோடியாக அதிகரித்தது. இது ஏறத்தாழ உலக சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்குக்கு சமமானது.
இதில் கூகுள் நிறுவனத்துக்கு என்ன பிரச்சினை என்ற கேள்வி எழலாம். கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் யூ ரியூப் இணையத்தளம்.
யூ ரியூப் இணையத்தளத்தில் வீடியோவொன்று பார்க்கப்பட்ட தடவைகளை கணக்கிடும் முறைமையானது கணினி விஞ்ஞானத்தில் 32 32-bit integer எனக் குறிப்பிடப்படும் முறையின் கீழ் வடிவமைக்கப்பட்டது. இதன்படி அதிக பட்சமாக 2,147,483,647 எனும் இலக்கம் வரையோ கணக்கிட முடியும். கங்ணம் ஸ்டைல் பாடல் இந்த எண்ணிக்கையை இவ்வாரம் கடந்து சென்றது.
"வீடியோவொன்று இந்த எண்ணிக்கையைவிட அதிகமாக பார்க்கப்படும் என நாம் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை" என யூ ரியூப் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தற்போது இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக மேற்படி கணக்கிடும் முறைமையை 64-bit integer ஆக யூ ரியூப் பொறியலாளர்கள் மாற்றியுள்ளனர். இதன்படி 9 செக்ஸ்டில்லியன் எனும் இலக்கம் வரை கணக்கிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan