வைத்தியசாலை வருவதற்கு அச்சம் வேண்டாம் - இலங்கையர்களிடம் கோரிக்கை

21 ஆடி 2023 வெள்ளி 08:35 | பார்வைகள் : 10127
அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பான முறையில் இயங்குவதோடு, நோயாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.
அத்துடன் ஒளடதங்களின் தரம் குறித்து நோயாளர்களுக்கு உறுதியளிப்பதோடு, வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நோயாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் இல்லை.
ஊடகங்களில் வெளியானதை போன்று நோயாளர்களின் உயிர்களுக்கு பலவந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அலட்சியப்போக்கில் சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1