கனடாவில் 2 சிறுமிகள் மாயம் .... தாய் மீது சந்தேகம்
20 ஆடி 2023 வியாழன் 08:58 | பார்வைகள் : 15972
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் இரண்டு சிறுமிகளை மாயமாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
8 வயதான அவுரா பால்டன் மற்றும் 10 வயதான ஜஸ்வா கோல்டன் ஆகிய இரண்டு சிறுமிகளை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயுடன் கெலவ்னா பகுதிக்கு பயணம் செய்த இருவரும் இரண்டு சிறுமிகளும் காணவில்லை என அவர்களது தந்தை சர்ரே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த பிள்ளைகளையும் தாயையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 30 ஆம் திகதி கெலவ்னா பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இறுதியாக இவர்களை கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழந்தைகளை அவர்களது தாயார் கடத்தி இருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தைகளின் தாய் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் எனவும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளை கண்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan