இரட்டை குழந்தைகள் பிறப்பதன் காரணம்
19 சித்திரை 2013 வெள்ளி 06:27 | பார்வைகள் : 16642
இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள ஒரு அண்ட செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகிறது. மற்ற விந்து செல்கள் அழிந்துவிடுகின்றன .
இந்த கரு முட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக மாறுகிறது. அதாவது ஆண், பெண் அணுக்கள் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக பிரிந்து கொண்டே சென்று , ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டையாக காணப்படும். இந்த ஆயிரக்கணக்கான செல்கள் கொன்ற கரு முட்டையே மொருலா என்ப்படும்.
மொருலாவானது மேலும் வளர்ச்சியடையும் போது மொருலாவின் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட குழந்தையின் உடல் உறுப்புகளாக மாறுகிறது. மொருலாவின் உறுப்புகளின் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னதாகவே மொருலாவானது இரண்டாக பிரியுமானால் , பிரிந்த இரண்டு மொருலாவும் வளர்சியடைந்து இரண்டு குழந்தைகளாக மாறுகிறது. இரண்டு மட்டும் இன்றி பத்து வரை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாம் .


























Bons Plans
Annuaire
Scan