800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை ஏற்பட்ட நிலை!
4 பங்குனி 2019 திங்கள் 11:06 | பார்வைகள் : 12916
டப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடு போய்விட்டதாக அயர்லந்துக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் அந்த மம்மி அங்கே புதைக்கப்பட்டது. அந்தச் சமாதியும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
St. Michan தேவாலயத்தின் மற்றொரு மம்மியும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
அது 300 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் மம்மி.
திருட்டு குறித்து அயர்லந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடப்பட்ட மம்மியின் தலையை மீட்பதில் தேவாலய அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan