உலகின் ஆக நீளமான தொங்குபாலம் பற்றி தெரியுமா?
8 வைகாசி 2021 சனி 09:34 | பார்வைகள் : 15487
உலகின் ஆக நீளமான தொங்குபாலம் போர்ச்சுகலில் (Portugal) திறக்கப்பட்டுள்ளது.
அதன் நீளம் 516 மீட்டர்.
UNESCO அங்கீகாரம் பெற்ற Arouca Geopark எனும் பூங்காவில் அமைந்துள்ள அந்தப் பாலம், 175 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
அதற்கு அடியில் நீரோட்டம் நிறைந்த ஒரு நதி ஓடுகிறது.
அந்தப் பாலத்தைப் பார்க்க அழகாக இருந்தாலும் அதைக் கடந்துசெல்வது சுலபமில்லை!
ஒவ்வோர் அடியும் பாலத்தைச் சற்று குலுங்கச் செய்யும்.
மக்களை ஈர்க்கும் வகையில் கட்டப்பட்ட அந்தப் பாலத்திற்கு 2.8 மில்லியன் டாலர் செலவானது.
கிருமித்தொற்றால் பாதிப்படைந்த ஏரோக்கா (Arouca) வட்டாரம், விரைவில் மீண்டுவரும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan