வைரலாகும் ஹாரிபாட்டர் புத்தகம்
14 ஆடி 2023 வெள்ளி 10:05 | பார்வைகள் : 11916
உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற டீன் ஏஜ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து எழுதப்பட்டவை ஆகும்.1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
லேமினேட் செய்யப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது.
இந்த புத்தகம் முதல் பதிப்பு 500 புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 300 புத்தகங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan