Paristamil Navigation Paristamil advert login

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க நாய்!

 கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க நாய்!

2 பங்குனி 2023 வியாழன் 12:04 | பார்வைகள் : 12176


உலகில் ஆக நீளமான நாக்கைக் கொண்ட நாய் கின்னஸ் சாதனை புரிந்திருக்கின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்பீ (Bisbee) என்ற நாயே இந்த சாதனையை படைத்துள்ளது.

3 வயதாகும் அந்த English setter வகை நாயின் நாக்கு 9.49 சென்டிமீட்டராகும். 

அதன் படம் ஒன்றைத் தமது சகோதரிக்கும் தந்தைக்கும் அனுப்பியபோது அவர்களில் ஒருவர் பிஸ்பீயின் நாக்கு உலகச் சாதனையாக இருக்கக்கூடும் என்று கூறியதாக எரிக்கா ஜான்சன் (Ericka Johnson) குறிப்பிட்டார்.

எரிக்கா, ஜே ஜான்சன் தம்பதியுடன் பிஸ்பீ அரிஸோனா மாநிலத்தில் வசித்து வருகிறது. 

இதற்கு முன்னர் நீளமான நாக்கு கொண்ட நாய் எனும் உலகச் சாதனை புரிந்திருந்தது மோச்சி (Mochi) என்ற நாயாகும்.

அதன் நாக்கு 18.58 சென்டிமீட்டர் நீளமாகும். அமெரிக்காவின் நார்த் டகோடா மாநிலத்தில் வசித்து வந்த அது 2021ஆம் ஆண்டு காலமானது குறிப்பிடப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்