என்னை புரிந்து கொள் உறவே..........
5 சித்திரை 2012 வியாழன் 18:17 | பார்வைகள் : 17018
அறியாத வயதும் இல்லை...
புரியாமல் தொடங்கிய
உறவும் இல்லை - ஆனால்
என்றும் புரியாத புதிராக
நீ என் உயிருக்குள்ளே.....
என் வசந்தத்தை நீ
உனக்குள்ளே வைத்து
தினம் தினம் எனக்கு தீ மூட்டாதே.......!
உன் அன்பு எனும் சிறகு தந்து
ஆகாயத்தில் பறக்கவிட்டு
பார்த்துப் பார்த்து ரசித்தாய்
பாடிப் பாடி சிரித்தாய்....
உனக்குள் உலாவரத்தான் நான்
விரும்புகின்றேன் உறவே...!
ஊருக்குள் உலா வருபவளாக
என்னை உற்று நோக்காதே....!
உயிரற்ற உடலாகப் போய் விடுவேன்.
உயிரே ஒருநாள் நீ முள்ளை
கடக்கும் தருணம் வந்தால்
உன் பாதத்தை காக்க முன்
வருபவள் நான்தான்....
நான் உன்னோடு விண்ணில்
செல்ல ஆசைப்படவில்லை.- உன்
கைகோர்து என் கவிதை
சொல்ல ஆசைப்படுகிறேன்....
என் மனதை கொடுத்தேன் உன்னிடம்
அதில் குற்றம் காணாதே...
அதற்க்கு அன்பு என்னும்
மெருகூட்டி ஆசையாக
திருப்பி தந்து விடு உயிரே...!
நீ இல்லாவிட்டால் - நான் வழி
மாறிப் போகமாட்டேன்
மரித்துப் போய்விடுவேன்.
என்னை புரிந்து கொள் உறவே......!
- நயினை வசந்தி






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan