பெண்கள் எல்லாம் கொல்லை நோயோ!!!
8 புரட்டாசி 2016 வியாழன் 15:28 | பார்வைகள் : 14655
வேண்டும் வேண்டும் என்றவள்
இன்று வேண்டாம் வேண்டாம்
என்கிறாள்
காரணங்கள் கேட்டால்
ஊமையாய் நடிக்கிறாள்
காதல் என்றால் என்ன
கற்பனை உலகமோ
பெண்கள் எல்லாம்
கொல்லை நோயோ
விஷத்தை என் இதயத்தில்
மருந்தாய் ஏற்றி
அவள் என் மரணத்தை
ருசி பார்கிறாள்
கண்ணீர் கடலில்
என்னை மூழ்கடித்து
அவள் மட்டும்
கரை சேர்கிறாள்
மந்திரமாய்
வந்தவள்
தந்திரமாய்
போகிறாள்
வலிகள் அனைத்தையும்
எனக்கு தந்து
அவள் ஒரு வாழ்க்கையை
தேடி போகிறாள்
நரகம் எங்கே ?
அது பூமியிலும் உண்டு
காதலித்துப்பார்
அங்கே நீயும் வாழலாம்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan