வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
1 பங்குனி 2020 ஞாயிறு 07:08 | பார்வைகள் : 14870
நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே
செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே
செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே
உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே
பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே
தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே
எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan