Paristamil Navigation Paristamil advert login

கடலும் கரையும்

கடலும் கரையும்

2 பங்குனி 2022 புதன் 07:04 | பார்வைகள் : 21492


கடலும் கரையும் 

 
கடலுக்கும்
 
கரைக்கும்
 
எப்பொழுதும்
 
நம்பிக்கையற்ற
 
நட்பு தான் 
 
இருவருமே
 
தள்ளு முள்ளுகளில்
 
கை தேர்ந்தவர்கள்தான் 
 
கொஞ்சம்
 
ஏமாந்து இடம்
 
கொடுத்தாலும்
 
ஒன்றை ஒன்று
 
விழுங்கத்தான்
 
பார்க்கிறது 
 
சில நேரங்களில்
 
கடல் தோற்பது
 
போல் பின் வாங்கினாலும்
 
சட்டென்று தன்
 
இடத்தை மீண்டு
 
வந்து பிடித்து
 
கொள்ளத்தான்
 
செய்கிறது