அவளின் மௌனம்
20 ஆவணி 2020 வியாழன் 13:52 | பார்வைகள் : 13109
ஆழ்ந்த மௌனத்தில்
ஆயிரமாயிரம் காவியங்கள்
அவளின் கடை விழி பார்வை
ஒன்று போதாதா ?
அவனியை பூக்காடாக்காதா ?
அவள் பேசும் வரைதான்
அழகு நம்மோடு பேசும்
அவள் பேசிவிட்டாலோ
அவள் வார்த்தைகளோடு
மனம் உறவாட போய்விடும்
அவள் மௌனமே ஓர் தவம் அந்த
அழகான தவத்தில் பிறக்கும் காதலே வரம்
வரம் கொடுக்கும் தேவதைகளின்
வார்த்தைகளை தேடி ஓடாமல்
வாழ்க்கை வரத்தை
அவள் மௌனத்தில் தேடுங்கள்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan