சந்தம்
22 கார்த்திகை 2022 செவ்வாய் 16:51 | பார்வைகள் : 15906
வெக்கையான ஒரு வெயிற்கால மதியம் -
தரு தந்த நிழலில் படுத்திருக்க
பழ ஈக்கள் மந்தமாய் முரலொலிக்கும்.
பட்டாம்பூச்சியின் படபடப்பு
அச்சூழலுக்கேற்ப பதமாக மெதுவாகும்.
அயன மண்டல வெயிற்கால
மந்தமான மதிய நேரம் ஒன்றில்.
கிளை கொப்பு இலைகளின்
நேர்த்தியான வடிவியல் -
நோக்கிய வண்ணமிருந்தேன்
அதன் மாயத்தை...
அனைத்துக்கும் மேலாய் இந்த
அதிசயக் குழப்பத்தின் ஊடே
ஆர்வத்தோடு உள் நுழைந்த
ஆதவனின் கதிர்கள் கண்டேன்
கிடந்திருந்த புற்தரையோடு
கலந்து ஒன்றிணையும் விருப்பத்தில்
சுத்த உயிரின் பரவசத்தில் - என்
உள்ளம் சிலிர்க்கிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan