மேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி!

12 வைகாசி 2019 ஞாயிறு 12:59 | பார்வைகள் : 6093
உலக வரலாற்றில் முதன் முறையாக மேகமூட்டத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.
சூரியனிலிருந்து வரும் ஒளியினை சூரியப்படல்களைக் கொண்டு மின்சக்தியாக மாற்றுவதைப் போன்று மேகங்கள் குளிர்ச்சியடைவதை அடிப்படையாகக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையானது Applied Physics Letters சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெப்பநிலை மாற்றம் அண்டவெளியில் காணப்படுதலானது மின்சார உற்பத்திக்கு மிகப்பெரிய மூலம் என அமெரிக்காவிலுள்ள ஸ்டன்ட் போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரான Shanhui Fan தெரிவித்துள்ளார்.