நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது விண்கலம்!

16 மார்கழி 2020 புதன் 15:19 | பார்வைகள் : 12367
சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருகிறது.
நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது.
‘சாங்கி-5’ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த 1-ந்தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.
கடந்த 3-ந்தேதி இந்த கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டு, விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இதையடுத்து சீனாவின் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளது. விரைவில் இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1