Paristamil Navigation Paristamil advert login

எந்த நாட்டிற்கும் கருத்துச் சொல்ல உரிமை இல்லை; பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

எந்த நாட்டிற்கும் கருத்துச் சொல்ல உரிமை இல்லை; பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

27 வைகாசி 2026 புதன் 10:42 | பார்வைகள் : 558


எந்த நாட்டிற்கும் கருத்துச் சொல்ல உரிமை இல்லை என ஜம்மு காஷ்மீர் குறித்த சீனா, பாகிஸ்தானின் கருத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற கருத்துக்களை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான விஷயங்களில் கருத்துத் தெரிவிக்க வேறு எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.

இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்து வருகின்றன; எப்பொழுதும் அப்படியே இருக்கும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில், இந்தப் பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை சட்டப்பூர்வமாக்க பிற நாடுகள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம், நிராகரிக்கிறோம்.

இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளுக்கு பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே 1963-ல் கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை; இரு நாடுகளும் பொதுவான எல்லையைப் பகிர்ந்து கொள்ளாததால், இது ஆதாரமற்றது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.