ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த ரியான் பராக் சரியான வீரர் - குமார் சங்ககாரா
26 வைகாசி 2026 செவ்வாய் 11:15 | பார்வைகள் : 580
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த ரியான் பராக் சரியான வீரர் என்று நினைத்ததாக பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று ப்ளேஆப் சுற்றுக்கு சென்றது.
அதன் பின்னர் அணித்தலைவர் ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி குமார் சங்கக்காரா சில விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
பராக் குறித்து சங்ககாரா கூறுகையில், "கடந்த சுமார் 7 ஆண்டுகளாக ரியான் விமர்சிக்கப்பட்டு வருவதைப் போல, வேறு எந்த வீரரும் விமர்சிக்கப்படுவதை நான் மிகக் குறைவாகவே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நான் இந்த அணியில் இணைந்ததில் இருந்து ரியானை விரும்புபவர்கள் எப்போதும் இருந்து வருகின்றனர்; அதே சமயம் குறிப்பாக சமூக ஊடகங்களில் அவரை அதிகம் விரும்பாதவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், நவீன கால கிரிக்கெட் விளையாட்டின் எதார்த்தமே இதுதான்" என்றார்.
மேலும், அவருக்கு கேப்டன் பொறுப்பு அளித்தது குறித்து அவர் கூறும்போது, "ரியானிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க நாங்கள் முடிவெடுத்தபோது, இந்த அணியை வழிநடத்த அவர்தான் மிக சரியான நபர் என்பதில் எங்களுக்கு துளியும் ஐயமில்லை.
அவரை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், ஆம் அவர் நிச்சயம் மென்மேலும் வளர்வார். அவர் பக்குவமடைவார். அவர் தன்னைத்தானே இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வார். மேலும், தனது அணியில் உள்ள சக வீரர்களையும் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள கற்றுக்கொள்வார்" என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan