Paristamil Navigation Paristamil advert login

ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்குவோம்; செங்கோட்டையன்

ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்குவோம்; செங்கோட்டையன்

26 வைகாசி 2026 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 913


ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்குவோம் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை, சூலுார் சிறுமி சிறுமி கொலை வழக்கு தொடர்பாக, போலீஸ் ஐ.ஜி., தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்க, முதல்வர் விஜயும் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தை, கடந்த தி.மு.க., அரசு, எத்தனை ஆண்டு கழித்து செயல்படுத்தியது என தெரியும். ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக, நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்குவோம். த.வெ.க., வாக்குறுதி அளித்த திட்டங்களை, எப்போது, எப்படி வழங்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் முடிவு செய்வார்.

கோவையில் உள்ள மருத்துவமனையில், ஆண்டுக்கு இருமுறை, முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். தற்போது, அங்கேயே தங்கி, பரிசோதனை செய்தேன். உறவினர் மருத்துவமனை என்பதால், இங்கே சிகிச்சை பெறுவது வழக்கம். இது இலவசமாக கிடைக்கின்ற சலுகை, அரசு செலவில் மேற்கொள்ள வேண்டிய நிலை இல்லை. இவ்வாறு செங்கோட்டையன்கூறினார்.