Paristamil Navigation Paristamil advert login

தவெகவில் குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்; ஸ்டாலின்

தவெகவில் குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்; ஸ்டாலின்

26 வைகாசி 2026 செவ்வாய் 07:20 | பார்வைகள் : 427


குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா என்று தவெகவுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாரின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை;

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம். பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அமமுக உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. அதிமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? 'தூயசக்தி' என்று சுய தம்பட்டம் அடித்தவர்கள், 'துயரசக்தி' என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பாஜ எதிர்ப்பும் பல்லிளிக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.