Paristamil Navigation Paristamil advert login

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் உள்ளிட்ட 3 பேர் திடீர் ராஜினாமா: தவெகவில் ஐக்கியம்

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் உள்ளிட்ட 3 பேர் திடீர் ராஜினாமா: தவெகவில் ஐக்கியம்

26 வைகாசி 2026 செவ்வாய் 05:16 | பார்வைகள் : 724


அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவான எஸ்பி வேலுமணி மற்றும் மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவி சண்முகம் தலைமையில் ஒரு பிரவாகவும் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதில் வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்ற, அதன் பின்னர் ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை இபிஎஸ் அதிரடியாக பறித்தார். தவெக அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி கோஷ்டி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட அங்கிருந்த சிலர் இன்று இபிஎஸ்சை சந்தித்து கோஷ்டி மாறினர்.

இந் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதங்களை அவர்கள் 3 பேரும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து வழங்கி உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு;

மரகதம் குமரவேல் - மதுராந்தகம் தொகுதி

சத்யபாமா - தாராபுரம் தொகுதி

ஜெயக்குமார் - பெருந்துறை தொகுதி

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அதிமுகவின் பலம் 47ல் இருந்து 44 ஆக குறைகிறது. ராஜினாமா செய்த மூவரும் அமைச்சர் ஆதவை சந்தித்தனர். அதன் பின்னர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.