Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

 அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

25 வைகாசி 2026 திங்கள் 17:10 | பார்வைகள் : 1024


அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, இந்த தகவல் வெளியாகயுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 342.63 ரூபாவாகவும் மற்றும் 354.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.