Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்த கோரிக்கை

இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்த கோரிக்கை

25 வைகாசி 2026 திங்கள் 15:15 | பார்வைகள் : 972


தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தீர்மானித்தல் போன்ற விடயங்கள், அதுகுறித்த விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவை என்று இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய தொழில்நுட்ப அறிவு இல்லாத தரப்பினரால் இந்நாட்களில் வெளியிடப்பட்டு வரும் தவறான கூற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.