Paristamil Navigation Paristamil advert login

யுரேனியம் தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை - ஈரானின் மூத்த அதிகாரி

யுரேனியம் தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை - ஈரானின் மூத்த அதிகாரி

24 வைகாசி 2026 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 1283


அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில், யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் நடைபெற்ற ஆரம்ப ஒப்பந்தத்தில், அணு தொடர்பான பிரச்சினைகள் சேர்க்கப்படவில்லை என்று ஒரு மூத்த ஈரான் அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதனால், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை வெளிநாட்டுக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

“அணு பிரச்சினை இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் மட்டுமே விவாதிக்கப்படும். தற்போதைய ஒப்பந்தத்தில் அது இல்லை. எனவே, யுரேனியம் கையிருப்பை வெளியேற்ற எந்த உடன்பாடும் இல்லை.” என கூறியுள்ளார்.

இந்த தகவல், அமெரிக்கா-ஈரான் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் இன்னும் பல சிக்கல்கள் உள்ளதை காட்டுகிறது. உலகளாவிய ஆற்றல் சந்தைகளில் இதனால் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.