எதிர்காலத்தில் பலமுனைகளில் போர் நடக்கும்: முப்படை தலைமை தளபதி
24 வைகாசி 2026 ஞாயிறு 10:45 | பார்வைகள் : 972
இனிவரும் காலங்களில், நிலம், கடல் , வான்வெளி மற்றும் விண்வெளி என பல முனைகளில் போர்கள் நடக்கும் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் ஷரடியில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி வளாகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:க்ஷ செயற்கை நுண்ணறிவு , ரோபோடிக்ஸ், டிரோன்கள் மற்றும் சைபர் அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் எதிர்கால போர்க்களத்தை வடிவமைத்து வருகின்றன. இனி வரும் காலங்களில் நவீன போர் முறையானது வழக்கமான மனிதவளம் சார்ந்த செயல்பாடுகளை தாண்டி வேகமாக பரிணமித்து வருகிறது.
எதிர்காலப் போர்கள் தரை, கடல், இணையவெளி மற்றும் வான்வெளி ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும் பல முனை போர்களாக இருக்கும்.
இனிமேல் போர்க்களம், ஒரு புவியியல் இடத்திற்குள் மட்டுப்படுத்தப்படாது. மாறாக தகவல் வலையமைப்புகள், டிஜிட்டல் சூழலமைப்புகள், இணைய உள்கட்டமைப்பு மற்றும் தரவு சூழல்களும் போர்க்களத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
ஷீரடி நகரம் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்திற்கு பெயர்பெற்ற நகரம். இனிமேல், இந்நகரம், பாதுகாப்பு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றின் மையமாகவும் அறியப்படும். இது உண்மையில் நம்பிக்கையும் எதிர்காலத் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் ஒரு அற்புதம் . இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan