Paristamil Navigation Paristamil advert login

சீன நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் பலி!

சீன நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் பலி!

23 வைகாசி 2026 சனி 14:51 | பார்வைகள் : 883


வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், 247 தொழிலாளர்கள் அங்கு நிலக்கரி சுரங்கம் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலக்கரி சுரங்கம் அகழ்வின் போது சேரியான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத காரணத்தால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காணாமல் போனவர்கள் தொர்பில் தேடுதல் நடவடிக்கை தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.