Paristamil Navigation Paristamil advert login

சவுதியை முந்தியது வெனிசுலா: இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி

சவுதியை முந்தியது வெனிசுலா: இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி

23 வைகாசி 2026 சனி 09:26 | பார்வைகள் : 734


இந்தியாவுக்கு அதிகம் கச்சா  எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி வெனிசுலா 3வது இடத்தை பிடித்துள்ளது.

ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.  ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்  மத்திய அரசு மாற்று வழிகளில் கச்சா எண்ணெய் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில்,  மே மாதம் மட்டும், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகரித்துள்ளது.இம்மாதம்,  இந்தியாவுக்கு அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்தன.அடுத்ததாக வெனிசுலா நாடு உள்ளது. இம்மாதம் மட்டும் அந்நாட்டில் இருந்து தினமும் 4 லட்சத்து 17 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. போன மாதம்  2 லட்சத்து 83 ஆயிரம் பேரல் ஆக இருந்தது. அதற்கு முந்தைய மாதங்களில் வெனிசுலாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததுஇல்லை.

வெனிசுலா குறைந்த விலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதால் அந்நாட்டில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.