பாகிஸ்தானில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!
22 வைகாசி 2026 வெள்ளி 08:06 | பார்வைகள் : 904
பாகிஸ்தானில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்திய முக்கிய தீவிரவாதியான ஹம்சா புர்ஹான், இனந்தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஷாபராபாத் நகரில் இந்த கொலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த தீவிரவாதியின் உடலில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மர்ம நபர்களால் தாக்கிக் கொல்லப்பட்ட புர்ஹானின் பெயர், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் பல பெரும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வந்தவர்களின் பட்டியலில் இவர் முக்கியமானவர் என கருதப்படுகிறது. அத்தகைய தாக்குதல்களை எல்லைக்கு வெளியே இருந்துகொண்டே திட்டமிட்டு நடத்திய ஒருவராக புர்ஹான் இருந்துள்ளார்.
இந்நிலையில், புர்ஹான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முஷாபராபாத் நகர பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan