தவெக அமைச்சரவையில் விசிக; திருமா அறிவிப்பு
22 வைகாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 900
தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சட்ட சபை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, அமைச்சரவையில் முஸ்லீம் இடம்பெறும் என்று அக்கட்சி அறிவித்துவிட்டது. அதேவேளையில், விசிக இடம்பெறுமா? என்பது குறித்து அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அமைச்சராக வன்னி அரசு பதவியேற்பார் என்று கூறினார்.
முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகானும், விசிகவின் வன்னியரசும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan