Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

 ஈரான் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

21 வைகாசி 2026 வியாழன் 08:22 | பார்வைகள் : 1009


மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஈரான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் எப்போதும் தனது கடமைகளை முறையாக மதித்து நடந்துள்ளதுடன் போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எங்கள் தரப்பிலிருந்து அனைத்து வழிகளும் திறந்தே உள்ளன.

கட்டாயப்படுத்துதல் அல்லது அச்சுறுத்தல் மூலம் ஈரானைப் பணிய வைக்கலாம் என்று நினைப்பது வெறும் மாயையே ஆகும்.

இராஜதந்திரத்தில் பரஸ்பர மரியாதை என்பது போரை விட மிகவும் புத்திசாலித்தனமானது, பாதுகாப்பானது மற்றும் நீண்ட காலம் நிலைக்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் நிலவி வரும் தீவிரமான அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA) மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.