ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் புதிய மகப்பேறு விடுப்பு திட்டம் – பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!!
20 வைகாசி 2026 புதன் 21:17 | பார்வைகள் : 2735
புதிய மகப்பேறு விடுப்பைப் பெற விரும்பும் பெற்றோர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் தங்கள் பணியிடத்துக்கு அறிவிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விடுப்பு திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்குப் பிறகு குழந்தை பெற்ற பெற்றோர்கள் பயன்பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் குடும்பத்துறை அமைச்சர் Stéphanie Rist தேசிய சபையில் உரையாற்றுகையில், மகப்பேறு விடுப்பைப் பெற விரும்பும் பெற்றோர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாகவே தங்கள் பணியிடத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜனவரி மாதம் முதல் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு கோரக்கூடும் என்பதால் சில நிறுவனங்கள் சிரமம் எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய மகப்பேறு விடுப்பு திட்டத்தின் கீழ், பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை கூடுதல் விடுப்பு வழங்கப்படும். முதல் மாதத்திற்கு நிகர சம்பளத்தின் 70 சதவீதமும், இரண்டாவது மாதத்திற்கு 60 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுப்பை பெற்றோர்கள் ஒரே நேரத்தில் அல்லது மாறி மாறியும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan