Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் சிறார்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டு!

பரிஸ்   சிறார்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டு!

20 வைகாசி 2026 புதன் 19:04 | பார்வைகள் : 1887


பரிஸ் 7‑ஆம் மாவட்டத்தில் உள்ள Saint‑Dominique பாடசாலையில், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் தொடர்பான, périscolaire நேரத்தில், 
பாலியல் வன்முறை மற்றும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் குற்றச்சாட்டில், 16 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை பாரிஸ் நீதிமன்றத்தின் சிறார் பாதுகாப்பு பிரிவு ( La brigade de protection des mineur)  நடத்தும் பல முன் விசாரணைகளின் ஒரு பகுதியாகும்.

காவலில் வைக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள்.

பரிஸ் நகர முதல்வர் எமானுவல் கிரெகொறி (Emmanuel Grégoire),

«இது கேவலமானது, நான் மன்னிப்பு கேட்கிறேன்.இந்த நிலை தொடர முடியாது.»

என, அவர் தனது தேர்தல் வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பணியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல்

சிறிய சந்தேகத்திலேயே இடைநீக்கம்

பாடசாலையில் «நம்பிக்கையின் சூழலை» மீண்டும் உருவாக்குதல்

விசாரணையின் பரவல் -

பரிஸ் நீதிமன்ற விசாரணையில் 100‑க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 

84 மழலையர் பாடசாலைகள்

20‑க்கும் மேற்பட்ட ஆரம்பப் பாடசாலைகள்

10‑க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்

போன்றவை இணைக்கப்பட்டுள்ளன

இவை அனைத்தும் périscolaire துறையில் பாலியல் வன்முறை அல்லது தாக்குதல் சந்தேகங்களுடன் தொடர்புடையவை.