இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட காணொளிக்கு பிரான்ஸ் கடும் கண்டனம்!!
20 வைகாசி 2026 புதன் 16:39 | பார்வைகள் : 1809
காசாவுக்கான உதவி கடற்படையில் இருந்த செயற்பாட்டாளர்கள் முழங்காலில் அமர்ந்தும், கைகள் கட்டப்பட்டும் காணப்படும் காணொளியை இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் வெளியிட்டமைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் தற்போது இராஜதந்திர சர்ச்சையாக மாறியுள்ளது.
பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot, குறித்த காணொளி “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டித்ததுடன், பிரான்சிலுள்ள இஸ்ரேலிய தூதுவரை அழைத்து விளக்கம் கோருமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை இத்தாலி அரசும் இஸ்ரேலிடம் மன்னிப்பு கேட்க கோரியுள்ளது.இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் பென் க்விர் செயற்பாட்டாளர்களை நடத்திய விதம் இஸ்ரேலின் மதிப்புகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஒவ்வாதது” என்று குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக உலக நாடுகளின் கவனம் மேலும் அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan