பலாப்பழ பாயாசம்
20 வைகாசி 2026 புதன் 13:25 | பார்வைகள் : 693
முக்கிய பண்டிகைகளில் உணவு பட்டியலில் பிரதான உணவாக அங்கம் வகிக்கிறது. ஆறு பொருட்கள் இருந்தால் போதும் பண்டிகைகளுக்கு சூப்பரான சுவையில் பலாப்பழம் பாயாசம் செய்யலாம்..
தேவையான பொருட்கள்;- பலாப்பழம், வெல்லம், தேங்காய், ஏலக்காய், உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு,
செய்முறை;-பலாப்பழத்தினை எடுத்து அதில் உள்ள விதையை தனியாக எடுத்துவிட்டு குக்கரில் வைத்து அவித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் மண் சட்டி அல்லது கடாய் வைத்து இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாவு போன்று செய்து கரைத்து கொள்ளவும். கரைத்த உடன் வடிகட்டு மூலம் வடிகட்டி கொள்ளவும்.
பின் மண்சட்டியில் நெய் ஊற்றி தேங்காய், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த பலாப்பழத்தினை ஊற்றி சற்று கலக்கி விட்டு கரைத்து வைத்த வெல்லத்தினை சேர்த்து கொண்டு கொதிக்க விடவும்.
கொதித்த பின் தேங்காய் பாலை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து எடுத்தால் பலாப்பழம், ஏலக்காய் மனம் கமகமன்னு மனக்கும் சூப்பரான கேரளா ஸ்டைல் பலாப்பழம் பாயாசம் சமைக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan