Paristamil Navigation Paristamil advert login

நடிகராக அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்?

நடிகராக  அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்?

20 வைகாசி 2026 புதன் 13:19 | பார்வைகள் : 857


தமிழில் பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தவிர தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் படங்களும் தயாரிக்கிறார். சினிமாவில் இயக்குனர்கள், நடிகராக மாறுவது சாதரணமாக நடைபெற்று வருகிறது.

அந்தக்காலம் துவங்கி இந்தக்காலம் வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளனர். லேட்டஸ்ட்டாக பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவிந்த் ஆகியோரை சொல்லலாம். இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் இணைய உள்ளார் என்கிறார்கள். அதன்படி, தியாகராஜ குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பாக்கெட் நாவல்'. இதில் இடம்பெறும் ஒரு முக்கிய அதிகாரி கதாபாத்திரத்தில் கார்த்திக் சுப்பராஜ் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் பரவி வருகிறது.