இலங்கையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
20 வைகாசி 2026 புதன் 06:19 | பார்வைகள் : 1091
இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரை நாட்டுக்கு மொத்தமாக 951,742 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்திய நாட்டவர்கள், அவர்களின் எண்ணிக்கை 221,953 ஆகும்.
மேலும், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், மே 1 முதல் 17 ஆம் திகதி வரை நாட்டுக்கு 75,465 சுற்றுலாப் பயணிகள் வருகை வந்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தரவுகளைக் கவனிக்கும்போது, 2026 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan