நீதிபதிக்கு எதிராக அவதுாறு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
20 வைகாசி 2026 புதன் 14:09 | பார்வைகள் : 1022
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது அவதுாறு பரப்பும் வகையில், சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றம், அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மேல்முறையீடு டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து கெஜ்ரிவால், ஆம் ஆத்மி நிர்வாகிகளான மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ., டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தெரிவித்த கெஜ்ரிவால் தரப்பினர், இந்த வழக்கை அவர் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.
எனினும், இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா நிராகரித்தார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பினர், சமூக ஊடகங்களில் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா குறித்து அவதுாறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan