Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் 2026யில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள வீரர்கள்

ஐபிஎல் 2026யில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள வீரர்கள்

19 வைகாசி 2026 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 1271


நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர்கள் தொடர்பில் தகவல்வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2026 தொடர் ப்ளேஆப் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

நான்காவது இடத்திற்கான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் உள்ளன.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆப் சுற்றுக்கு செல்ல, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளது.

இதற்கிடையில், அதிக ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போகும் வீரர் யார் என்ற போட்டியும் ஒருபுறம் நிலவுகிறது.

இதுவரை இந்த பந்தயத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசென் முதலிடத்தில் உள்ளார். அவர் 13 இன்னிங்ஸ்களில் 555 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், சாய் சுதர்ஸன் 1 ரன் குறைவாக 554 குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) 12 இன்னிங்ஸ்களில் 552 ஓட்டங்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்

ஹெய்ன்ரிச் கிளாசென் - 555 ஓட்டங்கள்
சாய் சுதர்ஸன் - 554 ஓட்டங்கள்
சுப்மன் கில் - 552 ஓட்டங்கள் 
விராட் கோஹ்லி - 542 ஓட்டங்கள் 
கே.எல்.ராகுல் - 533 ஓட்டங்கள்