Paristamil Navigation Paristamil advert login

தரவு கசிவுகள் அதிகரிப்பு – 2026ஆம் ஆண்டில் இணையத் தாக்குதல்கள் தீவிரம் !!

தரவு கசிவுகள் அதிகரிப்பு – 2026ஆம் ஆண்டில் இணையத் தாக்குதல்கள் தீவிரம் !!

19 வைகாசி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 129


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தரவு கசிவு மற்றும் இணையத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தனியுரிமை பாதுகாப்பு அமைப்பான Commission nationale de l'informatique et des libertés (CNIL) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் 6,167 தரவு மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2024ஆம் ஆண்டை விட 9.5 சதவீதம் அதிகம் எனவும் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத் துறை, சுகாதாரம், நிதி மற்றும் காப்புறுதி துறைகள் அதிகளவில் இணைய தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத் துறைக்கான Weda மென்பொருள் மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசகர்களுக்கான Harvest நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை பாதித்ததாகவும், அவை ஒரே சம்பவமாக இருந்தபோதிலும் 11,600க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவானதாகவும் CNIL விளக்கியுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே 2,730க்கும் அதிகமான தரவு மீறல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு சம்மேளனங்கள், விடுதிச் சங்கங்கள் மற்றும் Agence nationale des titres sécurisés (ANTS) போன்ற நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. “யாரும் பாதுகாப்பில் இல்லை” என CNIL தலைவர் Marie-Laure Denis எச்சரித்துள்ளார். 2026ஆம் ஆண்டில் இணைய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பும் சட்ட நடவடிக்கைகளும் மேலும் கடுமையடையும் என தெரிவித்தார்.