காமெடி நடிகர் முத்துக்காளை மனைவி மரணம்!
18 வைகாசி 2026 திங்கள் 16:17 | பார்வைகள் : 1239
பல தமிழ் திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்கவைத்தவர் முத்துக்காளை. நடிகர் விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் நடித்த பல காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
பல வருடமாக தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி பல பட்டங்களை பெற்றதாகவும் பல பேட்டிகளிலும் முத்துக்காளை சொல்லியிருக்கிறார். இவரின் மனைவி மாலதி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்..
தன் மனைவியின் மேல் சிகிச்சைக்கு முதல்வர் விஜய் உதவ வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்மோகனை மருத்துவமனைக்கு நேரில் அனுப்பி அவருக்கு தேவையான உதவிகளை விஜய் செய்ய சொல்லியிருந்தார். ராஜ்மோகனும் முத்துக்காளையை நேரில் சந்தித்து அவரின் மனைவி மாலதிக்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துக்காளையின் மனைவி மாலதி இன்று உயிரிழந்தார்.. அவருக்கு வயது 47. மாலதியின் உடல் தற்போது விருதுநகர் மாவட்டம் சங்கம்பட்டி என்கிற ஊருக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. மாலதியின் இறுதிச்சடங்கு இன்று இரவு சொந்த ஊரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan