Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு போர்: பொருளாதார விளைவுகள் குறித்து பரிஸில் ஜி7 நிதி அமைச்சர்கள் அவசர ஆலோசனை!!

மத்திய கிழக்கு போர்: பொருளாதார விளைவுகள் குறித்து பரிஸில் ஜி7 நிதி அமைச்சர்கள் அவசர ஆலோசனை!!

18 வைகாசி 2026 திங்கள் 07:42 | பார்வைகள் : 624


மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் உலக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் இன்று 18ம் திகதி திங்கட்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கூடுகின்றனர். குறிப்பாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மறித்துள்ள சூழ்நிலை காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் உரப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் சர்வதேச சந்தைகளில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சீனாவின் முக்கிய கனிம வளங்களின் மீதான சார்பை குறைக்கும் வழிமுறைகள் பற்றியும் ஜி7 நாடுகள் இந்த சந்திப்பில் ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் Roland Lescure பிரான்ஸ் 3 தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், “இப்போது நாடுகள் ஒன்றுடன் ஒன்று பேச வேண்டிய அவசியம் உள்ளது. பலவானின் சட்டம் நீண்ட காலம் செயல்படாது. அதனால் பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் அவசியம்” என தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உலக பொருளாதார நிலைத்தன்மைக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.