முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து; அடுத்த வாரம் டில்லி செல்கிறார்
18 வைகாசி 2026 திங்கள் 15:01 | பார்வைகள் : 1311
கேரள பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முதல்வர் விஜய், தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
கேரளம் மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்., கட்சியை சேர்ந்த சதீசன், அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா, திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
கேரளம், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, இன்று காலை தனி விமானத்தில், அவர் திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கேரளா பயணத்தை, முதல்வர் விஜய் திடீரென ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பதவியேற்ற பின், முதலில் டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பது தான் மரபு என்பதால், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் டில்லி செல்ல, விஜய் தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் வெளிநாடு சென்று திரும்பிய பின் சந்திப்பு நடக்கவுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan