அந்தளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் இல்லை; ரஜினி ஆவேச பேட்டி
17 வைகாசி 2026 ஞாயிறு 07:24 | பார்வைகள் : 1192
விஜய் முதல்வர் ஆவதை தடுக்கத்தான் ரஜினி ஸ்டாலினை சந்திக்க சென்றார் என்றும், வேறு ஏதோ இரண்டு பெரிய கட்சிகளை சேர்க்கத்தான் சென்றார் என்று விமர்சனம் வந்தது. அந்தளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் இல்லை என நடிகர் ரஜினி தெரிவித்தார்.
சென்னையில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அனைவருக்கும் வணக்கம். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இரண்டு, மூன்று விமர்சனங்கள் சோஷியல் மீடியாக்கள், அரசியல் உலகத்தில் பரவலாக பரவி கொண்டு இருக்கிறது.
அதற்கு விடை கொடுக்கவில்லை என்றால் அது உண்மையாகி விடும். நேற்று முன் தினம், பெங்களூருக்கு போகும் போது விமான நிலையத்திற்கு நீங்கள் வந்து இருப்பீர்கள், அங்கு கேள்வி கேட்பீர்கள் விடை கொடுத்துவிடலாம் என நினைத்தேன். அங்கு நீங்கள் இல்லை. பெங்களூருவில் இருந்து திரும்பி வரும் போது நீங்கள் இல்லை.
தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஸ்டாலினை சென்று சந்தித்தேன். அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்தது. அவர் 40 ஆண்டு நண்பர். எங்களுடைய நட்பு கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வியும், வெற்றியும் சகஜம். இருந்தாலும் அவர் தோற்றது சங்கடமாக இருந்தது. அதற்காகத்தான் நண்பர் என்ற முறையில் அவரை சென்று சந்தித்தேன்.
அதுக்கு நான் விஜய் முதல்வர் ஆக கூடாது, தடுக்க போய் இருப்பதாகவும், வேறு இரண்டு கட்சியையும் சேர்க்கவும் முயற்சிப்பதாக விமர்சனங்கள் வெளியே வந்தது. அந்த சூழலில் அப்படி பேச முடியுமா, அப்படி பேசும் தரம் கெட்ட ஆள் ரஜினிகாந்த் இல்லை. அதனை தெளிவுப்படுத்தி கொள்கிறேன்.
விஜய் பெற்ற வெற்றியானது எம்ஜிஆர், என்டிஆர் சாதனையை விட அதிகம். எனக்கு அதில் பொறாமை எதுவும் இல்லை. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் செய்ய வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan