தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் ரயில் மீது பேருந்து மோதி விபத்து
17 வைகாசி 2026 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 945
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பகுதியிலுள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தபோது, சரக்கு ரயில் மீது பேருந்து மோதுகிறது.
மோதிய வேகத்தில் அருகிலிருந்த பல வாகனங்கள் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது.
குறித்த சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்தின்போது பல இருசக்கர வாகனங்களும் அவற்றின் ஓட்டுநர்களும் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan