பொருளாதார நெருக்கடிக்கு சிக்கன நடவடிக்கை: அன்னிய செலாவணி அழுத்தத்தை தடுக்க முயற்சி
17 வைகாசி 2026 ஞாயிறு 12:11 | பார்வைகள் : 762
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக, உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதை பா.ஜ., ஆளும் மாநிலங்கள் தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்., விமர்சித்துள்ளது. நாட்டு மக்கள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி, சமீபத்தில், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது, பொது போக்குவரத்து மற்றும் மின் வாகனங்களை பயன்படுத்துவது, வீட்டிலிருந்தே பணியாற்றுவதை நிறுவனங்கள் ஊக்குவிப்பது உள்ளிட்ட வற்றை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவது, சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது போன்ற சுயக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
உ த்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம் ஆகி ய மாநிலங்களின் முதல்வர்கள், தங்களின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையும், எரிபொருள் பயன்பாட்டையும் பாதியாக குறைத்துள்ளனர்.
குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், இனி மாநிலத்திற்குள் செல்ல ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக ரயில் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தன் அமெரிக்கப் பயணத்தையே ரத்து செய்துள்ளார்.
எதற்காக இத்தகைய சிக்கன நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப் படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு, சர்வதேச அரசியல் சூழலால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் காரணம் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒட்டுமொத்த பொதுக் கடன், 80 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இதில், மத்திய அரசின் கடன் மட்டும், 55 சதவீதம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, 96 ரூபாயாக சரிந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் ஏற்றுமதிக்கு தேவையான அன்னிய செலாவணி இருப்பும் குறைந்து வருகிறது.
அன்னிய செலாவணி இருப்பே நாட்டின் இறக்குமதியை தீர்மானிக்கும். அதன்படி, நம் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, பிப்ரவரியில் 72,800 கோடி டாலராக இருந்தது. தற்போது, 69,000 கோடி டாலராக குறைந்துள்ளது.
இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான பற்றாக்குறையை சொல்லும் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு நம் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 8,400 கோடி டாலராக உயரும் என, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பு, 77,500 கோடி டாலர். அதில், 31 சதவீதமான, 24,000 கோடி டாலர் கச்சா எண்ணெய், தங்கம், சமையல் எண்ணெய், உரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கே செலவிடப்படுகிறது.
நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில், 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், இதன் விலை ஒரு பேரலுக்கு, 114 டாலராக உயர்ந்துள்ளது.
இரண்டாவதாக தங்கம். உலகளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா, 5-வது இடத்தில் உள்ளது. தங்கம் வாங்குவதை பாதியாக குறைத்தால், 3,600 கோடி டாலர் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்தலாம்.
சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதியும் அரசின் கஜானாவை காலி செய்கின்றன.
1 991 நெருக்கடி முன்னதாக, 1991ல்- வளைகுடா போர் வெடித்த போது, கச்சா எண்ணெய் விலை கடுமையா க உயர்ந்தது. இதனால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து, அன்னிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்தது.
வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு கூட டாலர் இல்லாத நிலை ஏற்பட்டதால், இந்தியா, 47,000 கிலோ தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் அடமானம் வைத்து அவசர கடன் பெற்றது. நாட்டின் பொருளாதார வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது .
அதே போன்றதொரு சூழல், தற்போதைய இஸ்ரேல்- - ஈரான் போரால் மீண்டும் வராமல் தடுக்கவே, இந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan