தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை சென்ற அர்ச்சுனா!
16 வைகாசி 2026 சனி 19:57 | பார்வைகள் : 1852
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது சென்னை சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் தமிழகத்தின் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ராஜ்மோகனைச் சந்தித்த பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, தமிழ் மக்களுக்காகத் தமிழக முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இதுவரை அவருக்கு முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அர்ச்சுனா,
முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்திக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வை நேரில் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், அந்த நாட்களில் இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னால் அதில் கலந்துகொள்ள முடியாமல் போனது” என்றார்.
மேலும் பேசிய அவர், “தமிழக மக்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்துக்காக இம்முறை வாக்களித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இத்தகைய மாற்றம் சாத்தியமில்லை எனப் பல அரசியல் ஆய்வாளர்கள் கூறியபோதிலும், இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும் என்பதைத் தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan