Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் - Instants
16 வைகாசி 2026 சனி 14:31 | பார்வைகள் : 996
உலகின் முன்னணி சமூக ஊடக தளமான Instagram, Instants எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சம், பயனர்கள் தங்கள் உடனடி தருணங்களை (in the moment) நண்பர்களுடன் பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Stories போலவே இருக்கும் Instants, ஆனால் இன்னும் வேகமாகவும், எளிமையாகவும் செயல்படும்.
Instagram வலைப்பதிவில் வெளியிடப்பட்ட தகவலின்படி, Instants மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் உடனடியாக பகிர முடியும். இது 24 மணி நேரத்திற்கு மட்டும் காணப்படும். பயனர்கள் கமெரா திறந்து, படம் எடுத்து, உடனே பகிர முடியும்.
“Instants பயனர்களை real-time sharing அனுபவத்திற்கு கொண்டு செல்லும். நண்பர்களுடன் தருணங்களை உடனடியாக பகிர்வது, சமூக ஊடக அனுபவத்தை இன்னும் இயல்பாக மாற்றும்” என Instagram தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் தற்போது சில நாடுகளில் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என Instagram உறுதியளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan