பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லித்தன் தாஸ் சதம்
16 வைகாசி 2026 சனி 14:49 | பார்வைகள் : 858
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லித்தன் தாஸ் சதம் விளாசினார்.
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி வங்காளதேச அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
மஹ்முதுல் டக்அவுட் ஆகி வெளியேற, தன்ஸித் ஹசன் 26 ஓட்டங்களும், மொமினுள் ஹக் 22 ஓட்டங்கள் எடுத்தனர்.
பின்னர் அணித்தலைவர் நஜ்முல் ஷாண்டோ 29 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ரஹீம் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் (Litton Das) அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பவுண்டரி அடித்து 6வது சதத்தினை பூர்த்தி செய்தார். மேலும், பாகிஸ்தானுக்கு இது அவருக்கு 3வது சதம் ஆகும்.
159 பந்துகளை எதிர்கொண்ட லித்தன் தாஸ் 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 126 ஓட்டங்கள் குவித்து ஹசன் அலி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக நஹித் ராணா வெளியேற, வங்காளதேச அணி 278 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
குர்ரம் ஷஸாத் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அப்பாஸ் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan